இந்த ஆண்டு முடிவுறுகையில், கர்த்தரிடம் ஜெப பிரதிபலிப்பு, நன்றிகூருதல், பசுமையான அர்ப்பணிப்பை வழங்குதல் ஆகியவற்றுக்காக நாம் அவருக்கு முன்பாக நேரம் செலவழிப்பது ஆவிக்குரியவிதத்தில் ஆரோக்கி-யமான ஒரு பயிற்சியாகும். ஒவ்வொரு காரியமாக பல புறம்பான மற்றும் பொருளாதார வழிகளில் கர்த்தர் நம் தேவைகளைச் சந்தித்திருப்பதற்காக அவருக்கு நன்றிசெலுத்துதல் தவிர, நாம் விசுவாசிகளாக அனுபவித்து-மகிழ்ந்திருக்கிற அற்புதமான உள்ளான மற்றும் நித்தியமான காரியங்-களுக்காகவும்கூட நாம் சிந்தித்து, அவருக்கு நன்றிசெலுத்தவும் முடியும். இவை, நம் பௌதிக கண்களால் அல்ல, மாறாக நம் இருதயத்தின் உள்ளான கண்களால் கண்டிருக்கிற, இப்பிரபஞ்சத்திலுள்ள மிகவும் நிஜமான மற்றும் நிலைத்திருக்கிற ஆசீர்வாதங்களாகும்.
இதைப் போன்று நாம் கர்த்தரோடு ஒரு விசேஷித்த நேரம் செலவழிக்கும்போது, அவருடன் நம் வழக்கமான அனுதின நேரத்திற்கு அப்பாற்ப்பட்டு, நம் இருதயங்கள் திறந்தும் மென்மையாகவும் ஆகின்றன, மேலும் நம்மிடம் பேசுவதற்கு நாம் அவருக்கு இன்னொரு வாய்ப்பைத் தருகிறோம். இந்த ஆண்டின் முடிவில் கர்த்தராகிய இயேசுவுக்கு நம் நன்றிசெலுத்துதலையும் துதித்தலையும் வளமாக்கும்படி நாம் ஜெபித்து பரிசீலிக்கக்கூடிய ஒருசில காரியங்கள் கீழேயுள்ளன
1. நித்திய ஜீவன்
“பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கொடையோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டானநித்திய ஜீவன்”(கிரேக்கு).
நம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள நித்திய ஜீவனே தேவனுடைய கொடை என்று கூறுகிறது. நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசித்திருப்பதால், நமக்கு நித்திய ஜீவன் இருக்கிறது! இந்த நித்திய ஜீவன் என்றால் என்ன? எப்போதுமேயிருக்கிற ஜீவனைவிட மேலானது, இந்த ஜீவன் சாட்சாத்து தெய்வீகமாக, தேவனுடைய சிருஷ்டிக்கப்படாத ஜீவனாகும், இதை ஆவியானவரால் நம் ஆவியில் மூலம் பெற்றிருக்கிறோம். இப்போது, மனிதர்களாகிய நாம் தேவனின் தெய்வீக ஜீவனையே பகிர்ந்துகொள்கிறோம்! தேவனுடைய பூரணமான, ஐசுவரியமான, மகிமையான, முழுமையான, தூய்மையான, அளவற்ற ஜீவன் இப்போது நம் ஜீவனாக, நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துமகிழ்ந்து, வாழ்வதற்காக இருக்கிறது. புதிய ஏற்பாட்டு மீட்டுத்திருப்புதல் படிவத்தில் இந்த வசனத்தின்விவரிப்பதுபோல, இந்த அற்புதமான, காணமுடியாத கொடை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக நம்மில் கிரியைசெய்கிறது:
2. காணாமலிருந்தும் நாம் அன்புகூருகிற இயேசு கிறிஸ்து
“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து” - 1 பேதுரு 1:8.
நம்மில் ஒருவரும் இயேசுவை நம் பௌதிக கண்களால் எப்போதுமே பார்த்திருக்கவில்லை, ஆயினும் நாம் அவரை நேசிக்கிறோம். நாம் ஒருபோதும் பார்த்திராத யாரோவொருவரை நேசித்து விசுவாசிக்கிறோம், மேலும் இதன் விளைவாக நாம் சொல்லமுடியாத மகிழ்ச்சியால் நிறைகின்றோம். இது எப்படி முடியும்? கலாத்தியர் 1:15-16ல் அப்போஸ்தலன் பவுல் செய்தது போலவே, ஒன்றும் நம்மிடத்திலிருந்து வருவதல்ல, மாறாக எல்லாம் நம்மில் தம் குமாரனை வெளிப்படுத்த பிரியமாயுள்ள தேவனிடமிருந்தே வருகிறது என்று நம்மில் ஒவ்வொருவரும் சாட்சிபகர முடியும். நாம் இயேசுவின் உள்ளான தரிசனம், மதிப்பு, அழகு ஆகியவற்றைப் பார்த்திருக்கிறோம். தேவனுடைய வார்த்தையில் நமக்கு வெளிப்படுத்தியபடி, இயேசு கிறிஸ்து மெய்யாகவே ஒப்பிடமுடியாதவர். அவரே தெய்வீகத்தோடு மெய்யான தேவன், பூரணமான மனுஷீகத்தோடு நிஜமான மனிதர். அவரே பாவமற்றவர், ஆயினும் அவர் நம் பலவீனங்களில் நம்முடன் பரிதபிக்க முடியும்; அவர் பலமானவர், துணிவுள்ளவர், ஆயினும் சாந்தமுள்ளவர், தாழ்மையானவர்; அவரே முற்றிலும் பிதாவின் சித்தத்தைச் செய்து, நமக்காக மரித்து, நம் ஜீவனாயிருக்க இப்போது நம்மில் வாழ்கிறார்! அவரிடம் கவர்ந்திழுக்கப்படாமலும் அவரை நேசிக்காமலும் நம்மால் இருக்க முடியாது.
நம் உள்ளான கண்கள் நம் ஆவியிலும் தம் வார்த்தையிலும் கர்த்தராகிய இயேசுவைக் கண்டிருக்கிற இந்த ஆண்டின் தருணங்களுக்காக நாம் கர்த்தருக்கு நன்றிசெலுத்தவும் அவரைத் துதிக்கவும் முடியும். நாம் எவ்வளவாய் அவரைப் பார்த்திருக்கிறோமோ, அவ்வளவாய் நாம் அவரை நேசிக்கிறோம். அவரே இப்பிரபஞ்சத்தில் மிகவும் நேசிக்கப்படத்தக்கவர். நம் அன்பு முழுவதிற்கும் மிகவும் பாத்திரமானவரை நாம் நோக்கிக்கொண்டிருக்கையில், அவரிடமே நம்மைக் கவர்ந்திழுப்பதற்காக நாம் அவருக்கு நன்றிசெலுத்தலாம், அவர் தம் அன்பினால் நம்மை நெருக்கட்டும், மீண்டும் நாம் நம் அன்பை அவருக்கு வழங்கட்டும்.
3. நாம் அவரைப் போலவே இருப்போம்
“பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளியரங்கமாக்கப்படவில்லை ஆகிலும் அவர் வெளியரங்கப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், என்று அறிந்திருக்கிறோம்.” – 1 யோவான் 3:2 (கிரேக்கு).
இன்னும் வெளியரங்கமாகாதிருப்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனத்தின் 1வது குறிப்பு நமக்கு உதவுகிறது:
தேவனுடைய வார்த்தை வியப்பூட்டும் உண்மையை நமக்குக் கூறுகிறது: விழுந்துபோன, மீட்கப்பட்ட பாவிகளாகிய நாம், நம்மைக் குறித்த எதினாலும் அல்ல, மாறாக தம் தெய்வீக ஜீவனில் முதிர்ச்சிக்கு வந்தடைவதினால், ஒருநாள் அவரைப்போல இருப்போம். நாம் நித்திய ஜீவனையும் சுபாவத்தையும் பெற்று, அதிகமாக அனுபவத்துமகிழ்கையில், சிறிதுசிறிதாக இந்த ஜீவன் கிறிஸ்துவின் சாயலுக்கு நம்மை மறுசாயலாக்குகிறது. இதன்மூலம், தம் ஜீவனால் பிறந்த பல குமாரர்களைப் பெற்று, அவரை வெளிக்காட்டும் தம் முதற்பேறான குமார-னாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படும் தேவனுடைய இருதய வாஞ்சையை அவர் அடைகின்றார்.
நாம் தெய்வீக ஜீவனில் வளர்ந்துகொண்டிருப்பதை உணரவோ நம் ஆவிக்குரிய முன்னேற்றத்தை இனங்காண்பதோ நாம் வழக்கமாக செய்வதில்லை என்றாலும், திரும்பிப்பார்ப்பதின்மூலம் நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தறிய முடியும். இந்த ஆண்டின் முடிவில், அதிகப்படியான, இயல்பான வேலையை கர்த்தர் நம்முள் செய்திருக்கிறார் என்பதை நாம் பரிசீலித்து, நம்மை அவரது ஜீவனில் முதிர்ச்சிக்குச் சீராகக் கொண்டுவர அவரது நம்பகத்தன்மைக்காக அவரைத் துதிக்க முடியும்!
கர்த்தரிடம் நம் மாறுத்தரம்
கடந்த ஆண்டில் கர்த்தர் நம் யாவர்மீதும் இப்பேர்ப்பட்ட இரக்கத்தை வைத்திருக்கிறார்! இந்தக் காரியங்களைப் பிரதிபலித்து, நமக்காக அவர் செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் நமக்கு அவர் எல்லாமாக இருப்பதற்-காகவும் கர்த்தருக்கு நன்றிசெலுத்தி நாம் நேரம் செலவழிக்கையில், நாம் அவரிடம் அர்ப்பணிப்பின் புதிய ஜெபங்களையும் ஏறெடுப்போமாக:
“கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னில் வளருமாறு, உம் நித்திய ஜீவனால் வாழவும் அதில் அதிகம் பங்கெடுக்கவும் வருகின்ற ஆண்டுக்காக நான் என்னை உமக்குத் தருகின்றேன். கர்த்தாவே, நாம் உம்மை நேசிக்கிறேன். நீர் என் அன்பு முழுவதிற்கும் பாத்திரமானவர். நான் என் இருதயம் முழுவதையும் உமக்குத் தருகின்றேன். மேலும் கர்த்தாவே, நீர் என் முழு ஆள்தத்துவத்தையும் உம் சாயலுக்கு ஒத்தசாயாலாக்கும்படியும் தேவனுடைய குறிக்கோள் நிறைவேறும்-படியும் உம் தெய்வீக ஜீவனோடு ஒத்துழைக்க நான் என்னை உமக்குத் தருகின்றேன்.”
அனைத்து வசனங்களும் பரிசுத்த வேதாகமத்தின் மீட்டுத்திருப்பப்பட்ட படிவத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன .இந்த பகுதி Bibles for America இல் இருந்து எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .)
All verses are quoted from the Holy Bible Recovery Version, and this portion has been taken and translated from Bibles for America

“நித்திய ஜீவன் என்பது மூவொரு தேவனின் சாட்சாத்து ஜீவனாகும். நாம் தேவனால் நீதிப்படுத்தப்பட்டிருப்பதின் அடிப்படையில் இந்த ஜீவன் நமக்குள் உட்பகிரப்பட்டிருக்கிறது, மேலும் இது பரிசுத்த-மாகுதல் மற்றும் மறுசாயலாகுதல் மூலம் நம் ஆள்தத்துவம் முழுவதிலும் இப்போது பரவிக்கொண்டிருக்கிறது. இது, கர்த்த-ருடைய மகிமையின் வெளியரங்கமாதலில் ஒரு பங்கைக் கொண்டிருக்க (கொலோ. 3:4) நாம் ஏற்றவர்களாக ஆகக்கூடுமாறு நம் ஆள்தத்துவம் கர்த்தருடைய சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்-படுவதையும் நம் ஆள்தத்துவம் கர்த்தருடைய மகிமைக்குள் கொண்டுவரப்படுவதையும் விளைவிக்கும்.”இதுவே நாம் சொந்தமாக்கியுள்ள நித்திய ஜீவன்! இது நம்மை ஆற்றலூட்டு-கிறது, நம்மில் பரவுகிறது, நமக்குள்ளிருந்து நம்மை மறுசாயலாக்குகிறது. நம்மில்நிறைவேற்ற மிக அதிகமாக செய்யும் அவரது நித்திய ஜீவனை நமக்குத் தருவதற்காக ஆழ்ந்து சிந்தித்து தேவனுக்கு நன்றிசெலுத்த நேரத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ஆண்டு அவரது தெய்வீக ஜீவனை நாம் அனுபவித்துமகிழ்ந்திருக்கிற எல்லா நேரங்களுக்காக நாம் அவருக்கு நன்றிசெலுத்தலாம். நாம் அவருடைய வார்த்தையில் அவரால் ஊட்டப்பட்டு அவரது நாமத்தைக் கூப்பிடுவதின்மூலம் அவரது ஐசுவரியங்களை அனுபவமாக்கியிருக்கிறோம். இந்தப் புதிய ஆண்டில் அவரது ஜீவனில் அதிக அனுபவமகிழச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் நாம் அவரிடம் ஜெபிக்கலாம்.
2. காணாமலிருந்தும் நாம் அன்புகூருகிற இயேசு கிறிஸ்து
“அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து” - 1 பேதுரு 1:8.
நம்மில் ஒருவரும் இயேசுவை நம் பௌதிக கண்களால் எப்போதுமே பார்த்திருக்கவில்லை, ஆயினும் நாம் அவரை நேசிக்கிறோம். நாம் ஒருபோதும் பார்த்திராத யாரோவொருவரை நேசித்து விசுவாசிக்கிறோம், மேலும் இதன் விளைவாக நாம் சொல்லமுடியாத மகிழ்ச்சியால் நிறைகின்றோம். இது எப்படி முடியும்? கலாத்தியர் 1:15-16ல் அப்போஸ்தலன் பவுல் செய்தது போலவே, ஒன்றும் நம்மிடத்திலிருந்து வருவதல்ல, மாறாக எல்லாம் நம்மில் தம் குமாரனை வெளிப்படுத்த பிரியமாயுள்ள தேவனிடமிருந்தே வருகிறது என்று நம்மில் ஒவ்வொருவரும் சாட்சிபகர முடியும். நாம் இயேசுவின் உள்ளான தரிசனம், மதிப்பு, அழகு ஆகியவற்றைப் பார்த்திருக்கிறோம். தேவனுடைய வார்த்தையில் நமக்கு வெளிப்படுத்தியபடி, இயேசு கிறிஸ்து மெய்யாகவே ஒப்பிடமுடியாதவர். அவரே தெய்வீகத்தோடு மெய்யான தேவன், பூரணமான மனுஷீகத்தோடு நிஜமான மனிதர். அவரே பாவமற்றவர், ஆயினும் அவர் நம் பலவீனங்களில் நம்முடன் பரிதபிக்க முடியும்; அவர் பலமானவர், துணிவுள்ளவர், ஆயினும் சாந்தமுள்ளவர், தாழ்மையானவர்; அவரே முற்றிலும் பிதாவின் சித்தத்தைச் செய்து, நமக்காக மரித்து, நம் ஜீவனாயிருக்க இப்போது நம்மில் வாழ்கிறார்! அவரிடம் கவர்ந்திழுக்கப்படாமலும் அவரை நேசிக்காமலும் நம்மால் இருக்க முடியாது.
நம் உள்ளான கண்கள் நம் ஆவியிலும் தம் வார்த்தையிலும் கர்த்தராகிய இயேசுவைக் கண்டிருக்கிற இந்த ஆண்டின் தருணங்களுக்காக நாம் கர்த்தருக்கு நன்றிசெலுத்தவும் அவரைத் துதிக்கவும் முடியும். நாம் எவ்வளவாய் அவரைப் பார்த்திருக்கிறோமோ, அவ்வளவாய் நாம் அவரை நேசிக்கிறோம். அவரே இப்பிரபஞ்சத்தில் மிகவும் நேசிக்கப்படத்தக்கவர். நம் அன்பு முழுவதிற்கும் மிகவும் பாத்திரமானவரை நாம் நோக்கிக்கொண்டிருக்கையில், அவரிடமே நம்மைக் கவர்ந்திழுப்பதற்காக நாம் அவருக்கு நன்றிசெலுத்தலாம், அவர் தம் அன்பினால் நம்மை நெருக்கட்டும், மீண்டும் நாம் நம் அன்பை அவருக்கு வழங்கட்டும்.
3. நாம் அவரைப் போலவே இருப்போம்
“பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளியரங்கமாக்கப்படவில்லை ஆகிலும் அவர் வெளியரங்கப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், என்று அறிந்திருக்கிறோம்.” – 1 யோவான் 3:2 (கிரேக்கு).
இன்னும் வெளியரங்கமாகாதிருப்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனத்தின் 1வது குறிப்பு நமக்கு உதவுகிறது:
“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பதால், அவர் வெளியரங்க-மாகும்போது நாம் ஜீவனின் முதிர்ச்சியில் அவரைப் போலவே இருப்போம். அவரைப்போல இருப்பதென்றால் ‘நாம் என்னவா-யிருப்போம்’ என்பதாகும். இது இன்னும் வெளியரங்காமாகவில்லை. தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகவும் உயரிய ஆசீர்வாதத்துடனான ஒரு மாபெரும் எதிர்காலம் இருக்கிறது: நமக்கு தெய்வீக சுபாவம் மட்டும் இருக்காது, தெய்வீக ரூபத்தையும் ஏந்தியிருப்போம். தெய்வீக சுபாவத்தில் பங்கெடுப்பதென்பது ஏற்கெனவே ஒரு மாபெரும் ஆசீர்வாதம் மற்றும் அனுபவமகிழ்ச்சியாகும், இன்னும் தேவனைப் போலவே இருப்பது, அதாவது அவரது ரூபத்தை ஏந்தியிருத்தல் மிகப்பெரிய ஆசீர்வாதமாகவும் அனுபவமகிழ்ச்சி-யாகவும் இருக்கும்.”