கிறிஸ்துமஸைக் குறித்து - டிசம் 25 - கிறிஸ்து பிறந்த நாளா ?

தற்போது, அரசியல்ரீதியான பாபிலோன், மதரீதியான பாபிலோனைவிட முனைப்பு குறைந்துள்ளது. அரசியல்ரீதியான பாபிலோன் சற்று ஓயும் நிலையில் இருக்கிறது, அதேசமயம் மதரீதியான பாபிலோன் செழிந்தோங்குகிறது. உதாரணமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், முற்றிலும் பாபிலோனிலிருந்துவருவதாகும். கிறிஸ்துமஸில் பங்குபெறுதல் ஒரு சிறிய காரியமாகத் தோன்றக்கூடும், ஆனால் பாபிலோனியப் பகுதியாக இருக்கிற எதுவும் தேவனின் பார்வையில் அருவருப்பாயிருக்கிறது. ஒரு மனிதன் பேசுவதும் மற்றெல்லாரும் கேட்பதுமான சபைக் கூடுகைகளிலுள்ள அமைப்பும் பாபிலோனின் பகுதியாக இருக்கிறது. இந்தப் பாபிலோனிய மூலக்கூறு நம் மத்தியில் தங்கியிருக்க அனுமதிக்கப்படாதிருக்க வேண்டும். (Life-Study of Isaiah, Msg. 26)
கிறிஸ்துமஸ் எனும் நடைமுறையை அழிப்பதைக் குறித்து நான் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற ஒரு கட்டுரையைச் சமீபத்தில் வாசித்தேன். உண்மையில், கிறிஸ்துமஸ் எனும் நடைமுறையைத் தாக்கும் எந்த நோக்கமும் என்னிடம் இல்லை. என்னுடைய நேரம் மற்றவர்களுக்குக் கிறிஸ்துவை ஊழியஞ்செய்கிறதினால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் கிறிஸ்துவை மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்கையில், கிறிஸ்துமஸ் தன்னிச்சையாகவே அம்பலமாக்கப்படுகிறது. ஆம், நாம் முழுவதும் கிறிஸ்துவுக்காக அக்கறைகொண்டு, பெயரளவிலான கிறிஸ்துமாஸ் அல்லது கிறிஸ்துமஸ் என்பதைக் குறித்து மறந்துவிட வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம், ஆனால் கிறிஸ்தவத்தின்துவம்என்பதற்காக அக்கறைகொள்ளக் கூடாது என்றும் நான் கூறியிருக்கிறேன். கிறிஸ்துமஸையோ கிறிஸ்தவத்தையோ எதிர்க்கும் நோக்கம் நிச்சயமாக என்னிடம் இல்லை. எனினும், என்னுடைய ஊழியத்தில், நாம் கிறிஸ்துவுக்காக அக்கறைகொள்ளவும் நிஜமான கிறிஸ்தவர்களாக இருக்கவும், ஆயினும்மஸ்அல்லதுதுவம்என்பனவற்றோடு சம்பந்தப்படாமலிருக்கவும் வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். குறிப்பிட்ட நபர்கள் இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்கும்போது, கிறிஸ்தவத்தை எதிர்ப்பதையும் கிறிஸ்துமஸ் எனும் நடைமுறையை அழிப்பதையும்குறித்து அவர்கள் என்னைக் குற்றஞ்சாட்டுகின்றனர். (Life-Study of Second Corinthians, Msg. 17)
புளிப்பை எடுத்துக்கொண்டிருப்பது கத்தோலிக்க சபை மட்டுமல்ல, புரொட்டஸ்டன்ட் ஸ்தாபனங்களும், குழுக்களும் கூட. ராக் இசை மற்றும் நாடகம் ஆகியன மக்கள் ஏற்றுக்கொள்ளும்படிச் செய்வதற்கு ஆவிக்குரிய காரியங்களை எளியதாக ஆக்க பயன்படுத்தப்படும் புளிப்பின் வகைகளாக உள்ளன. நான் சீனாவில் இருந்தபோது, சுவிசேஷம் பிரசங்கித்தலுடன் கூடைப்பந்தைக் கலந்திணைத்த ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களிலுள்ள சில இளம் மனிதர்களைப்பற்றி நான் அறிவேன். சுவிசேஷம் பிரசங்கிப்பதற்காக கூடைப்பந்தைப் பயன்படுத்துவதும்கூட புளிப்பே. அநேகர் இதன்மூலம் இரட்சிக்கப்பட்டுள்ளனர் என்பதில் நான் சந்தேகமுறுகிறேன். Y. M. C. A. இன் முழுக் கோட்பாடும் புளிப்பாக உள்ளது, ஏனெனில் Y. M. C. A. இன் இலக்கு பரலோக தரத்தை பூமிக்குரிய மட்டத்திற்குக் கீழாகக் கொண்டுவருவது, ஓர் உலகப்பிரகாரமான விதத்தில் சமயச்சார்பற்ற சமுதாயத்துக்குச் சுவிசேஷத்தைக் கொண்டுவருவது. கிறிஸ்தவத்தில் அநேகக் காரியங்கள் புளிப்பாக உள்ளன. கிறிஸ்துமஸ், ஈஸ்டர், விக்கிரகங்கள், படங்கள், உருவங்கள், ராக் இசை, நாடகம் மற்றும் முழு Y.M.C.A. அமைப்பு ஆகியன இவற்றுள் உள்ளடங்கும். தேவனின் குறிக்கோளுக்காக கிறிஸ்துவல்லாத எதையும் எடுக்காதிருக்க நாம் கவனமாயிருக்க வேண்டும், ஏனெனில் அவரைத் தவிர வேறெதுவும் புளிப்பாக உள்ளது. ஆ, தந்திரமானவன் தன் இரைக்காக காத்திருந்து அருகே பதுங்கிக் கொண்டிருக்கிறான்! மக்கள் ஆவிக்குரிய காரியங்களை அனுபவமாக்குவதற்கு அவற்றை எளிதாகச் செய்யும் விருப்பம் நம் மனித சுபாவத்தில் இருப்பதால் நாம் எளிதில் அவனது இரையாக ஆக முடியும். ஆனால் ஆவிக்குரிய காரியங்களைத் தொட மக்களுக்கு உதவுவதற்கு நீங்கள் பயன்படுத்தும் எதுவாயினும் அது புளிப்பின் ஒரு மாதிரியாகும். சுவிசேஷத்தை அறிவிக்கவும், மக்களை கிறிஸ்துவிடம் கொண்டுவரவும் தூய்மையான, பரிசுத்தமாக்கப்பட்ட வழி ஜெபமும், வார்த்தையின் ஊழியமும் ஆகும். வேறு எந்த வழியையும் எடுக்காதீர்கள். ஜெபித்து, வார்த்தையை ஊழியஞ்செய்தபிறகு, மக்கள் இன்னும் சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்ளா-விட்டால், அது கர்த்தரைப் பொறுத்தது. மக்கள் நம் வார்த்தையைப் பெற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது பிதாவின் சித்தத்தைப்பற்றிய ஒரு காரியமாகும். நம் சுவிசேஷப் பிரசங்கித்தலில் உதவுவதற்கு எந்தத் தந்திரத்தையும் பயன்படுத்த நாம் விரும்பவில்லை. ஒவ்வொரு தந்திரமும் புளிப்பாக உள்ளது. நாம் ஒரு வேலைக்காக அல்லது ஓர் இயக்கத்துக்காக இல்லைநாம் இயேசுவின் சாட்சிக்காக உள்ளோம்.  (Life-Study of Matthew, Msg. 38)
வெளிப்படுத்தல் புத்தகம் எழுதியதிலிருந்து அதிகபட்சம் பத்தொன்பது நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்த நூற்றாண்டுகள்தோறும் சாத்தானுக்கும் தேவனுக்கும் ஒரு போராட்டம் நடைபெற்றுவந்திருக்கிறது. கிறிஸ்துவை இடமாற்றஞ்செய்ய சாத்தான் வெவ்வேறு வழிகளில் முயன்றுவந்திருக்கிறான். இதன் விளைவாக, நான் உட்பட நம்மில் பலர், மிகவும் சிறிதளவே கிறிஸ்துவைக் கொண்ட நிறுவனமாக்கப்பட்ட கிறிஸ்தவத்திற்குள் பிறந்தோம். உதாரணமாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எவ்வளவு அதிகமான கிறிஸ்து இருக்கிறார்? இன்றைய கிறிஸ்தவத்தில் சத்தியம் மற்றும் பொய்யின் ஒரு கலப்படம் இருக்கிறது. மிகவும் சொற்ப விசுவாசிகளே ஆழமான மற்றும் முழுவதுமான விதத்தில் சத்தியத்தை அறிந்துள்ளனர். (Life-Study of Acts, Msg. 65)
இது என் போதனையல்ல. நாம் புதிய ஏற்பாட்டிலுள்ள தூய வார்த்தையிடம் திரும்பினால், நாம் கிறிஸ்து என்ற பதத்தையும், கிறிஸ்தவர்கள் என்ற பதத்தையும் காண முடியும் (அப். 11:26). எனினும், கிறிஸ்தவம், அல்லது கிறிஸ்துமஸ் எனும் பதங்கள் வேதத்தில் இல்லை. ஒருவித துவம்அல்லது மஸ்கிறிஸ்துவுடன் சேர்க்கப்பட்டிருக்-கிறது. கிறிஸ்துமஸ் மாயை. மக்கள் ஒரு சிறு மரத்தின்மீது விளக்குகளைத் தொங்கவிடும்போது, அது ஒரு துவம்மற்றும் மஸ்ஆகும். அதுதான் மாயை. நாம் மதத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்: மதம் மாயை. இப்போது மதத்தின் மாயையைக் குறித்து, ஒருசில காரியங்களை நாம் பரிசீலிக்க வேண்டும். முதலாவது, மதத்திற்கு, ஒரு புறம்பான பெயர் இருக்கிறது (2:17). சமீபத்தில், முடி கத்தரிக்க நான் ஒரு முடிவெட்டும் கடைக்குச் சென்றேன். முடிவெட்டுகிறவர் கிறிஸ்மஸ் ஆராதனையில் கலந்துகொள்வதைக் குறித்துப் பேசினார். அங்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்று அவரிடம் கேட்க நான் அந்த வாய்ப்பைப் பயன்படுத்-தினேன். அவர், “உங்களுக்குத் தெரியுமா, இது ஒரு மதக் கடமைதான். சிலர் ஆண்டுக்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் சமயத்தில் மட்டுமே ஆராதனையில் கலந்துகொள்கின்றனர்என்று கூறினார். இங்கு மதத்தின் மாயையின் ஓர் எடுத்துக்காட்டை நாம் காண்கிறோம்: ஒரு கத்தோலிக்கராக இருப்பதன் பெயரைக் காத்துக்கொள்வதற்கு, ஒரு மதக் கடமையாக ஆண்டுக்கு ஒருமுறை ஆராதனையில் கலந்துகொள்ளுதல். இவர் எவ்வகையான விசுவாசி? வெறும் புறம்பான ஒரு பெயரையுடைய ஒரு விசுவாசி. நீங்கள் ஆவியில் நிஜமாக இருந்து, நீங்கள் ஓர் உண்மை-யான விசுவாசி என்ற கருத்துடனிருந்தால், அது அற்புதமானது. எனினும், நீங்கள் நிஜத்தில் குறைவுபட்டு, வெறுமனே புறம்பான பெயரை காத்துக்-கொண்டால், அதற்குப் பொருளேதும் இல்லை. அது மாயை. (Life-Study of Romans, Msg. 4)
இன்று இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மதச்சார்பற்ற உலகத்தைவிட இன்னும் மதரீதியான உலகத்தால்கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிச்சயமாக மதரீதியான உலகத்தோடு தொடர்புடையது. நீங்கள் இன்னும் கிறிஸ்துமஸை அனுசரித்துவந்தால், நீங்கள் புதிய சிருஷ்டிப்பில் இருக்கிறீர்கள் என்பது சந்தேகத்திற்குரியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தேவனின் புதிய சிருஷ்டிப்போடு எந்தச் சம்பந்தமுமில்லை. (Life-Study of Galatians, Msg. 30)
மனிதமாம்சமாகுதல் கிறிஸ்துமஸ் உடன் இணைக்கப்படக்கூடாது. கிறிஸ்துமஸ் உடன் தொடர்புடைய எல்லாம் எரிக்கப்பட வேண்டும். நீங்கள் சீனாவுக்குச் சென்று, கற்றறிந்த மக்களுக்குச் சுவிசேஷம் பிரசங்கித்து, கிறிஸ்துமஸை குறிப்பிடுவதானால், அவர்கள் உங்களுக்குச் செவிகொடுக்க-மாட்டார்கள். கிறிஸ்துமஸ் மரங்கள், மிட்டாய்கள் நிறைந்த மூட்டைகள், கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற இப்படிப்பட்ட காரியங்கள் மிகத் தாழ்வானது, மேலோட்டமானது, குழந்தைத்தனமானது என்று அவர்கள் கூறுவார்கள். இது தேவனின் வார்த்தையிலிருந்து வரும் சுவிசேஷமல்ல. இது புறச்சமயத்துக்-குரியது, இது மத்தேயு 13:33 இல் கர்த்தராகிய இயேசுவால் குறிப்பிடப்பட்ட புளிப்பு, கர்த்தர் தீர்க்கதரிசனமுரைத்தபடியே பெண்ணினால்கத்தோலிக்க மதத்துக்குள் கொண்டுவரப்பட்டது. இவ்விதமான பிரசங்கித்தலால் கற்றறிந்த மக்கள் எவ்வாறு நம்பவைக்கப்பட முடியும்? நீங்கள் தெருவில் உள்ள ஏழைக் குழந்தைகளை நம்பவைக்கலாம், ஆனால் கருத்தூன்றிய மக்களை நீங்கள் நம்பவைக்க முடியாது. (Life-Study of Hebrews, Msg. 8)
மாம்சத்திற்குரிய அனுபவித்தல்களில் அவிசுவாசிகளோடு பங்குபெற நாம் அக்கறைகொள்வதில்லை என்பது அவர்களுக்கு விநோதமாகத் தோன்றும். குறிப்பாக, நாம் கிறிஸ்துமஸ் கொண்டாடவோ, கிறிஸ்துமஸ் விருந்துகளுக்காக அக்கறைகொள்ளவோ இல்லை என்பதை அவர்கள் விநோதமாக சிந்திக்கக் கூடும். இந்தச் சீர்கெட்ட உலகத்தின் வழி, அதாவது கோணலும் மாறுபாடுமான தலைமுறையின் வழி சுகபோகம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் பாணியைப் பின்பற்றுவதாகும். ஆனால் இந்தப் பாணியின்படி நாம் அவர்களுடன் சேர்ந்து ஓடமாட்டோம். (Life-Study of First Peter, Msg. 26)

இந்த விசுவாசத்துரோக சபையினுடைய செயல்களின் மிகக் கவனத்தை ஈர்க்கிற உதாரணங்களுள் ஒன்று, பெயரளவிலான கிறிஸ்துமஸ். நமக்கு கிறிஸ்து தேவை, ஆனால் நமக்கு மாஸ் (பெருந்திரள்) தேவையில்லை. பெயரளவிலான கிறிஸ்துமஸ் நாளான, டிசம்பர் 25 ஆரம்பத்தில், சூரியனை வணங்கிய பழங்கால ஐரோப்பியர்களின் நாளாக இருந்தது. டிசம்பர் 25 சூரியனின் பிறந்தநாள் என்று அவர்கள் கூறினர். விசுவாசத்துரோக சபை ஐரோப்பாவுக்குப் பரவியபோது, அவள் இந்தப் பழங்கால வழக்கத்தைத் தன்மயமாக்கினாள், ஏனெனில் அவள் அவிசுவாசிகளில் ஆயிரமானோரை சபைக்குள் கொண்டு வந்திருந்தாள். இந்த அவிசுவாசிகள் தங்கள் கடவுளின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினர். ஆகையால், அவர்களுக்கு இணங்கிப்-போக, விசுவாசத்துரோக சபை டிசம்பர் 25 ஐ கிறிஸ்துவின் பிறந்தநாளாக இருக்கும்படி அறிவித்தது. இதுவே கிறிஸ்துமஸின் தோற்றம். இரண்டு பாபிலோன்கள், என்ற புத்தகம் விசுவாசத்துரோக சபைக்குள் கொண்டு-வரப்பட்டிருந்த தீய, பிசாசுத்தனமான, பேய்த்தனமான காரியங்களை அம்பலமாக்குகிறது. எதிர்மறையான பக்கத்தில், இந்தச் சித்திரத்தை நாம் பார்த்தால், பின்பு நேர்மறையான பக்கத்தில் நாம் என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் அறிவோம். (Life-Study of Revelation, Msg. 13)

கிறிஸ்தவ பயிற்சிகளைக் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கிறிஸ்துமஸ்டிசம்பர் 25—கிறிஸ்துவின் பிறப்பின் நாளாக இன்றைய காலண்டரில் நியமிக்கப்பட்ட நாள். கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவரல்லாத-வர்களும் சமமாக அதைக் கொண்டாடுகின்றனர். ஆனால் கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் ஒரு கட்டளை வேதத்தில் உள்ளதா? இந்த நாளில்தான் கிறிஸ்து பிறந்தாரா?  இன்றைய கிறிஸ்துமஸ் வழக்கங்களும் நடைமுறைகளும் கிறிஸ்தவ தோற்றத்திற்குரியதா? அல்லது கிறிஸ்துமஸ் என்பது புறவினத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே கலப்படத்தின் ஓர் உதாரணமா?
கிறிஸ்து குளிர்காலத்தில் பிறக்காதிருத்தல்
கிறிஸ்துவின் பிறப்பு, முழு பிரபஞ்சத்திலும் நிகழ்ந்த அதி முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறபோதிலும், கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதின் மூலம் இன்னும் அதை நினைவுகூர்வது என்பது கிறிஸ்தவர்கள் செய்யும்படி தேவன் விரும்புகிற ஒன்றல்ல. கர்த்தருடைய பிறப்பைக் குறித்த துல்லியமான எந்த நாளும் வேதத்தில் இல்லை என்பது கர்த்தர் ஒருபோதும் தம் பிறந்தநாளைக் கொண்டாட உத்தேசிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மாறாக, தம் மரணத்தை நினைவுகூரவும் தம் இரண்டாம் வருகையை எதிர்நோக்கியிருக்கவும் அவர் நம்மிடம் விரும்புகின்றார் (1 கொரி. 11:26; வெளி. 22:12).
கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த உண்மையான நாளைப் பொருத்தவரை, டிசம்பர் 25 என்பது சந்தேகமாக இருக்கிறது. இயேசுவினுடைய பிறப்பின் வேளையில் இருந்த வானிலை, அது டிசம்பரில் நிகழ்ந்திருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசு பிறந்தபோது, மேய்ப்பர்கள் இரவில் ஆடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தனர் என்று லூக்கா 2:8 நமக்குக் கூறுகிறது. குளிர்காலத்தின் நடுவே மாலைவேளையில் உள்ள குளிரான வானிலை மிகவும் கொடூரமானது; நவம்பரின் தொடக்கத்திற்கு முன்பே, அதாவது, குளிர்கால மாதங்களின் தொடக்கத்திற்கு முன்பதாகவே, யூதேயாவிலுள்ள மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வீட்டிற்குக் கொண்டுவருவது வழக்கமாயுள்ளது. எனவே, கிறிஸ்துவின் பிறப்பு டிசம்பரில் இருந்திருக்க முடியாது.
கி.மு. 4ல் ரோமப் பேரரசர் அகஸ்டஸ் இராயர், தன்னிடம் எத்தனை அடிமைகள் இருப்பதையும் எவ்வளவு வரிகளை தான் சேகரிக்க முடியும் என்பதையும் அறிந்துகொள்ள, ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்படுவதற்கு ஓர் ஆணையைப் பிறப்பித்தார். சிரியாவின் (இங்கு யூதேயா மிகப்பெரிய ரோம-கட்டுப்பாட்டிலான மாகாணத்தின் பகுதியாக இருந்தது) ஆளுநராக இருந்த கியூரினியஸ், அதே ஆண்டில் யூதேயாவின் கணக்கெடுப்பிற்காக முதல் சேர்க்கையை எடுக்க ஆணையை செயலாற்றினார். அசெளகரியமான கடுமையான குளிர்கால மாதங்கள், புயல் மற்றும் மழைக்காக குளிர்காலத்தில் பாதுகாப்பற்றதும் இனிமையற்றதுமான பயணங்களை மேற்கொள்ள, வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய தேசத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு மக்களின் பயணஞ்செய்தல் அவசியமாக்கின, அதிகாரிகள் வரி சேர்க்கைக்காக ஒதுக்கியுள்ள காலமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்ட எந்த வரலாற்றுக்குரிய பதிவுகளும் இருக்கவில்லை. தெற்கத்திய கலிலேயவிலுள்ள நாசரேத் எனும் நகரத்திலிருந்து தெற்கத்திய யூதேயாவிலுள்ள தன் சொந்த ஊரான பெத்லகேமுக்கு யோசேப்பு மரியாளுடன் சென்றான் என்பது பதிவுசெய்தலுக்கான ஆணைக்குக் கீழ்ப்படிதலாக இருந்தது (லூக். 2:1-5). கர்ப்பிணியான மரியாள் நாசரேத்தி-லிருந்து பெத்லகேம்வரை 190 கி.மீ பயணஞ்செய்திருப்பாள் என்பதும் சாத்தியமற்றதாக இருக்கிறது, ஏனெனில் ஒரு கர்ப்பிணிப் பெண் குளிர்காலத்தின்போது பயணஞ்செய்வது ஏற்றதல்ல என்பது கருத்தில்-கொள்ளப்பட்டது (மத். 24:20; மாற்கு 12:18).
கிறிஸ்துமஸின் கணிப்பு வேதவாக்கிய பதிவுடன் முரண்பாடாயிருத்தல்
களஞ்சியத்தில் ஒன்றுகூடிய தம் பெற்றோர்கள், தங்கள் மந்தையுடன் மேய்ப்பர்கள், தங்கள் காணிக்கைகளுடன்மூன்று இராஜாக்களாலும்”, அறிவித்த தூதர்கள் மற்றும் வெளியேயுள்ள நட்சத்திரத்தாலும் சூழப்பட்டு, முன்னனையில் குழந்தை இயேசுவைக்கொண்ட வழக்கப்படி சித்தரிக்கப்படும் கிறிஸ்துமஸ் பிறப்புப்பற்றிய காட்சி இயேசுவின் பிறப்பின்போது உண்மையில் நிகழ்ந்ததின் துல்லியமான பதிவு அல்ல.
இயேசுவிடம் மேய்ப்பர்களின் வருகையும் சாஸ்திரிகளின் வருகையும் வெவ்வேறு நேரங்களிலும் தனித்தனியான இடங்களிலும் நிகழ்ந்தது. மத்தேயு 2:1-12, லூக்கா 2:1-20 ஆகியவை இயேசுவின் பிறப்போடு தொடர்புடைய கதைகளின் தனித்தனி கணக்குகளைப் பதிவுசெய்கிற இரண்டு வேதவாக்கிய பத்திகளாகும். நாம் மத்தேயு 2ம் அதிகாரத்தில் மேய்ப்பர்களைக் காண்பதில்லை, மேலும் நாம் லூக்கா 2ம் அதிகாரத்தில்மூன்று இராஜாக்களையும்காண்பதில்லை. லூக்கா 2ம் அதிகாரம், மரியாள், யோசேப்பு ஆகிய இருவரையும் முன்னனையில் கிடக்கும் குழந்தை இயேசுவையும் இறுதியாக கண்டடைந்த மேய்ப்பர்களுக்கு தூதர்கள் தோன்றும் சித்திரத்தை வழங்குகிறது (.16). மத்தேயு 2ம் அதிகாரம் கிழக்கிலிருந்துவந்த சாஸ்திரிகளை (அல்லது ஞானிகள், இராஜாக்கள் அல்ல) சித்தரிக்கிறது, இவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபின், இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம், தொலைதூர யூதேயாவில் மாபெரும் இராஜா பிறந்திருப்பதற்கான ஓர் அடையாளமாக இருக்க வேண்டும் என்று நம்பி, புதிய இராஜா பிறந்திருப்பதாக எண்ணப்பட்ட எருசலேமாகிய தலைநகரத்திற்குப் புறப்பட்டுச்சென்றனர், ஆனால் ஏரோது இன்னும் இராஜாவாக ஆளுகைசெய்வதையே கண்டு, அவனால் விசாரனைசெய்யப்பட்டனர். அந்த நட்சத்திரத்தின் வழிகாட்டுதலின்கீழ் அவர்கள் பெத்லகேமுக்கு வந்துசேர்ந்த நேரத்தில், கிடங்கின் தற்காலிக, கரடுமுரடான புகலிடத்திலிருந்து ஒரு வீட்டிற்கு யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் இடம்பெயரச்செய்ய முடிந்தது. அவர்கள் அந்த வீட்டிற்குள் நுழைகையில், குழந்தை இயேசுவும் மரியாளும் மட்டும் இருப்பதைக் கண்டனர் (. 11).  கர்த்தரின் பிறப்புக்குபின் சில காலத்திற்குள்ளாகவே இது நிகழ்ந்திருக்க முடியும், இதனால்தான் ஏரோது, சாஸ்திரிகளிடமிருந்து துல்லியமாய்க் கேட்டறிந்த காலத்தின்படி, பெத்லகேமிலும் அதன் அனைத்து எல்லைகளிலும் இருந்த இரண்டு வயதும் அதற்குக் குறைவானதுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொலைசெய்ய கட்டளையிட்டான் (மத். 2:16). மேலும், சாஸ்திரிகள் மூன்று விதமான காணிக்கைகளைக் கொண்டுவந்தது, அவர்கள் மூன்று சாஸ்திரிகள் என்று அர்த்தங்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதே உண்மை.
கிறிஸ்துமஸின் துவக்கம் புறச்சமயத்துக்குரியதாய் இருத்தல்
கிறிஸ்துமஸ்என்ற கட்டுரையின் கீழ், கத்தோலிக்க கலைக்களஞ்சியம் கூறுகிறது: சபையின் ஆரம்ப நாட்களில் இப்படிப்பட்ட ஒரு பண்டிகை இல்லை...சபையின் ஆரம்ப பண்டிகைகளினிடையே கிறிஸ்துமஸ் ஒன்றாக இருக்கவில்லை...ஆரம்ப நாட்களிலுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை நினைவுநாளாக கொண்டாடவில்லை.
முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக கி.பி. 325 வரை உபத்திரவப்படுத்தப்பட்டனர். நிசியா சங்கத்திலுள்ள ரோமப் பேரரசன் கான்ஸ்டான்டைன் நிசியா பிரமாணத்தை முறைப்படுத்தியபோது, முழுவதும் அதை நியமனத்துக்குரியதாக, சட்டஞ்சார்ந்ததாக ஆக்கி, அதை பேரரசின் அரசாங்க மதமாக ஆக்கினான். தங்கள் புறவின பண்டிகைகளை விட்டுவிட விருப்பமில்லாத ரோம-தன்னாட்சிக்குட்பட்ட மாகாணங்களை அனைத்திலுமுள்ள பெயரளவில் மனம்மாறியவர்களைத் திருப்திப்படுத்தும் முயற்சியிலும், மதத்தின் காரியத்திற்கு அவர்களைக் கீழ்ப்படுத்துவதிலும், பல்வேறு கடவுள்களைக் கனப்படுத்தும் அநேக புறவின மத பண்டிகைகளையும், நடைமுறைகளையும் கிறிஸ்தவத்துக்குள் கான்ஸ்டான்டைன் தத்தெடுத்தான். கிறிஸ்தவப் பிறப்பைக் கொண்டாடும் புறவின தன்மைக்கும், வீணானதன்மைக்கும் எதிராக அநேக உண்மையுள்ள விசுவாசிகள் எதிர்ப்புகள் செய்தபோதும், கி.பி. 354 இலிருந்து ரோம பஞ்சாங்கம், பல புறவின மதங்களால் கொண்டாடப்பட்டு வந்த டிசம்பர் 25ஐ கிறிஸ்துவின் பிறப்பின் தேதியாக கருதப்பட வேண்டும் என்று முதல் தெளிவான அறிக்கையைத் தந்தது.
முன்பு கிறிஸ்தவத்துக்கு மனமாற்றமடைவதில், ரோம குடிமக்களிடையே மித்ராயிசம் மிகப் பரந்து-விரிந்ததாயும், மிக ஆதிக்கஞ்செலுத்துகிற புறவின மதமாகவும் இருந்தது. மித்ரா பண்டைய பெர்சியாவில் (இன்றைய ஈரான்) சூரியக் கடவுளாக இருந்தது. நூற்றாண்டுகளுக்கு முன் அலெக்சாண்டரால் பெர்சியர்கள் தோற்கடிக்கப்பட்டபிறகு, படைவீரர்கள் மித்ராவின் வழிபாட்டை ஆசியா முழுவதும், ஐரோப்பாவுக்கும் கொண்டுவந்தனர், அங்கு அது டியூஸ் சால் இன்விக்டஸ் மித்ராஸ் என்று அழைக்கப்பட்டது. இது ரோம மற்றும் கிரேக்க உலகங்கள் முழுவதும் ஒரு விடுமுறையாக டிசம்பர் 25ன் கொண்டாட்டத்தை ஊக்குவித்தது. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் இவ்வாறு கூறுகிறது, “கிறிஸ்துவின் பிறப்பு, குளிர்கால சூரிய சலனத்தின் தேதியில் நியமிக்கப்பட்டது, ஏனெனில் இந்த நாளில், சூரியன் அதின் வடக்கத்திய வானங்களுக்கு திரும்ப ஆரம்பித்தபோது, மித்ராவின் புறவின வழிபாட்டாளர்கள் டயஸ் நடாலிஸ் சோலிஸ் இன்விக்டை (வெல்லயியலாத அல்லது ஜெயிக்க இயலாத சூரியனின் பிறப்பை) கொண்டாடினார்கள்...பிரபல்யமான சூரிய பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்பட்டது, நம் டிசம்பர் மாதத்துக்கான பொறுப்பின்மீது ஒரு பலமான ஆதாரம் கொண்டிருக்கிறது.
டிசம்பர் 25ன் உச்சநிலைப்படுத்தும் குளிர்கால சூரிய சலனத்தின்போது, பேரிரைச்சலான வாரம்-முழுதும் நடைபெறும் சர்டனிலியா, புருமாலியா என்ற பண்டிகைகளுடன் சனிக்கிரகத்தையும், மற்ற வேளாண் தெய்வங்களையும் கனப்படுத்த இந்த விழாவை ரோமர்கள் பின்பற்றினர். இந்த இரண்டு புறவின பண்டிகைகளும், கி.பி. 530ல் கிறிஸ்தவ ஆதிக்கத்தினால் இந்த பிரபல்யமான வழக்கத்தை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவை ஆதிக்கம் செலுத்தின. ரோம சபை, டிசம்பர் 25ஐ கிறிஸ்துவின் பிறப்பாக சட்டப்படி அறிவிக்க துறவி டையான்சியஸ் எக்சிகியூசுக்கு ஆணையிட்டது.
குளிர்கால இடைக்கால பண்டிகையும் அநேக மற்ற கலாச்சாரங்களால் கொண்டாடப்பட்டது. எகிப்தியர் அதை இசிஸ் மகனுக்கும், வானத்து இராணிக்கும், ஒசிரியஸ் மற்றும் கோரசுக்கும் உரித்தாக்கினர். கிரேக்கர்கள் அதை தங்கள் தெய்வங்களான அப்பொல்லோ, டியான்சஸ், அடோனிஸ் இவற்றுக்கு உரித்தாக்கினர். அரபியாவிலுள்ள செபேனியர்கள் இதை சந்திரனின் பிறப்பாக கொண்டாடினர். சாக்சோனியர்கள், ஸ்கான்டிநேவியன் என்ற யுத்தத்தின் கடவுளாகிய தோரைக் கனப்படுத்துவதில் யூலைக் கொண்டாடினர். ஸ்காட்லாந்தில், கோக்மேனி என்று கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில், நார்டிக் கடவுளாகிய பால்டருக்கு இது கொண்டாடப்பட்டது. பாபிலோனியர்கள், ‘மதுஅருந்தும் பண்டிகையாகியபாக்கஸ் என்ற பண்டிகையுடன் பாலின் பிறப்பைக் கொண்டாடினர்.
கி.பி. 600ல், விசுவாசத்தின் வளர்ச்சிக்கு உதவ கிறிஸ்தவத்துக்கு நடைமுறையிலிருக்கும் உள்ளூர் மதரீதியான  வழக்கங்களைக் தத்தெடுக்க கேட்டர்பரியில் முதல் தலைமைக் குருவாக இருந்த அகஸ்டினுக்கு போப் ஒன்றாம் கிரிகோரி அறிவுறுத்தினார். புறவின சமயத்தாரின் இந்த கியுமோன்கஸ் அமல்கமேஷனும், கிறிஸ்தவமும் கிறிஸ்துமஸ் என்று இன்று அறியப்படுகிற விந்தையான கலவையில் முடிவுற்றது.

கிறிஸ்துமஸின் வழக்கமும், நடைமுறையும் விக்கிர ஆராதனையாக இருத்தல்
கிறிஸ்துமஸ் மரம்—கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்திலுள்ள ஸ்காண்டிநேவியர்கள் மரங்களை ஆராதித்தனர். எகிப்தில் பேரீச்சை மரம் ஒரு மத சின்னமாக வீடுகளுக்குள் கொண்டுவரப்பட்டது. ரோமில், சனி கிரக பிறப்பைக் கனப்படுத்துவதில், தேவதாரு மரம் பொம்மைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது; பூமிக்குச் சூரியனின் திரும்பிவருதலைச் சுட்டிக்காட்ட  மெழுகுவர்த்திகள் மரங்களில் கட்டப்பட்டன. முலாம்பூசிய ஆப்பிள்களையும் மற்ற காணிக்கைகளையும் அந்த மரத்தின் கிளைகளில் கட்டுவதன் மூலம் மதபோதகர்கள் ஊடினை கனப்படுத்தினர். ஜெர்மனியர்கள் யூல் கடவுளை தொழுது கொண்டாடுவதிலும், உயிர்த்தெழுந்த சூரிய கடவுளுக்கு பண்டிகை அனுசரிப்பதிலும் பசுமையான மரங்களைப் பயன்படுத்தினர்; அவர்கள் நல்ல அதிஸ்டத்தின் ஒரு சின்னமாக அதை வீடுகளுக்குள் கொண்டுவந்தனர். மரங்களை வெட்டி அவற்றை வீடுகளில் அலங்கரிப்பதில் புறவினத்தாரின் வீணான மற்றும் விக்கிர ஆராதனைக்குரிய வழக்கங்களை கற்பதைக் குறித்து எரேமியா 10:2-5ல் கர்த்தர் நம்மைப் பலமாகத் தடைசெய்கிறார்.
மாலைகள்—ஆரம்ப நாட்களில், புற சமயத்தார் நல்ல அதிஸ்டத்தை வெளிப்படுத்த  பண்டிகைகளில் மாலைகளைக் கொண்டு ஆராதனை இடங்களை அலங்கரித்தனர். ஆனால், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங். 40:4). அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங். 38:4).
ஓக்மரக்கிளை, பெரிப் பழங்கள், வெண்பெரி ஒட்டுச்செடி—வெண்பெரி செடியின்கீழ் முத்தம் கொடுக்கும் கிறிஸ்துமஸ் பழக்கம் சனி கிரக பண்டிகையிலிருந்து வந்தது. ஓக் மரக்கிளை, பெரி பழங்கள், வெண்பெரி செடி ஆகியன, அவற்றின் கீழ் நின்று முத்தம் கொடுக்கிறவர்களில் கருவளத்தின் சக்தியைத் தூண்டி, அந்தக் கடவுள் மற்றும் பெண் தெய்வத்தின் ஆவிகள் தங்களுக்குள் நுழையும்படி ஆலயங்களின் வாசல் வழிகளிலும், வீடுகளிலும் தொங்கவிடப்பட்டன.
அன்பளிப்பு-கொடுத்தல்—இது சனிகிரக மற்றும் ஜனவரி புத்தாண்டு பண்டிகையை ரோமர்கள் கொண்டாடுவதிலிருந்து துவங்கியது. அன்பளிப்புகளைப் பறிமாறுகிற இன்றைய கிறிஸ்துமஸ் நடைமுறை கர்த்தருடைய பிறப்பின்போது பரிசுகள் வழங்கப்பட்டன என்பதன் அடிப்படையில் இருக்கிறது. ஆனால் அந்த ஞானிகள் கர்த்தருக்கு காணிக்கைகளைச் செலுத்தினர் மற்றவர்களுக்கு அல்ல.
கிறிஸ்துமஸ் தாத்தா—ஜன்னல்கள் வழியாக பரிசுகளை எரிந்து பிள்ளைகளுக்கு பரிசுகளைத் தரும்படி நான்காம் நூற்றாண்டில் புனித நிக்கோலாயஸிடம் கூறப்பட்டது. அவர் புகைப்போக்கி வழியாக வீட்டுக்குள் நுழைகிறார் என்ற நம்பிக்கை, கெர்த்தா எனும் பெண்தெய்வம் நெருப்பு இருக்கிற இடத்தில் தோன்றி, அந்த வீட்டுக்கு நல்ல அதிஸ்டத்தைக் கொண்டுவருகிறது என்பதை நம்பிய பழைய நோர்ஸ் புராண கதையிலிருந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்—இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மகிழ்ந்துகளியாடுதலானது, புசித்தல், குடித்தல் பல பாணிகளில் கூத்து ஆடை அணிதல் ஆகியவற்றில் தீய நோக்கத்துடன் திளைப்பதால் எடுத்துக்காட்டப்பட்ட சனிகிரக மற்றும் ப்ருமாலியா என்ற பழங்கால புறச்சமய பண்டிகைகளின் அதே நிலையில் உள்ளது. “ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்திருந்தார்களென்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள்” என்று பவுல் நம்மை எச்சரித்தார் (1 கொரி. 10:7).

முடிவுரை
கிறிஸ்துமஸ் நினைவுகூருதல் என்ற தன் செய்தியில் சகோதரர் வாட்ச்மென் நீ இவ்வாறு கூறுகிறார், “பல விசுவாசிகளின் அபிப்பிராயத்தின்படி, இரட்சகரின் பிறப்பை நினைவுகூரும்படி ஒவ்வோர் ஆண்டும் ஒரு நாளைக் கொண்டிருப்பது ஒரு நல்ல காரியம்தான்...ஆனால், ஒருவரது அபிப்பிராயத்தைத் தவிர, தேவ வார்த்தையான வேதமே, ஒரே தர-அளவுகோல், அதிஉயர்ந்த தர-அளவுகோல். நம் கரிசனை மனிதன் பேசுவதின் அடிப்படையில்  இல்லாமல், தேவன் பேசியிருப்பதன் அடிப்படையில் இருக்கிறது...கிறிஸ்துவின் பிறப்பை நினைகூருவதற்கான கட்டளை வேதத்தில் இருக்கிறதா?...தேவன் கட்டளையிடாத காரியங்களும் தேவன் கட்டளையிட்ட காரியங்களும் ஒரே அளவில் முக்கியத்துவம்வாய்ந்தவை என்பதை வேதத்தில் விசுவாசிப்பவன் மட்டுமே அறிவான்...கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு தேவன் ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று பலர் கூறுகிறார்கள்...தங்கள் பாவத்திற்கு ஒரு சாக்குபோக்கையும் மாம்சத்திற்கு ஒரு வாய்ப்பையும் கொடுக்க கிறிஸ்தவர்கள் வேதவாக்கியத்தை ஆராய்வது வருத்தத்திற்குரியது... தேவன் கட்டளையிடாததை செய்ய எவ்வாறு துணிவோம்என்று கூறும்படி நமக்குத் திறனளிக்க தேவன் நமக்கு அதிக பலத்தைத் தருவாராக.
தேவத்துவத்தில் அல்லாமல் (1 கொரி. 8:6), ஜீவனிலும் (1 பேதுரு 1:3) சுபாவத்திலும் (2 பேதுரு 1:4) (அவரது பிள்ளைகளாகுமாறு நம் மறுபடிஜெநிப்பித்தல்மூலம்யோவான் 1:12-13) மனிதன் தேவனாகும்படி (அவரது மாம்சமாகுதல்மூலம்) தேவனை மனிதனாக்குவதே கிறிஸ்துவினுடைய பிறப்பின் உண்மையான உட்கருத்து. தேவப் பிள்ளைகளாக நாம் உலகத்தில் இருக்கிறோம், ஆனால், நாம் உலகத்திற்குரியவர்கள் அல்ல (யோவான் 17:11, 14). நாம் உலகத்திலிருந்து முற்றும்முடிய பிரிந்திருந்தால், சபை வாழ்க்கைக்கான ஒரு தூய வாழ்க்கையை (1 தெச. 5:23) ஒரு பரிசுத்த வாழ்க்கையை நாம் வாழ்வோம். புறசமய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலுள்ள களிப்பும் கேளிக்கையும் நம் பரிசுத்த வாழ்க்கையை முற்றுகையின்கீழ் தள்ளும். விக்கிரக வழிபாடு ஒரு பயங்கரமான பாவம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்குபெறுவது கர்த்தர் வெறுக்கும் ஓர் அருவருப்பாகும். கிறிஸ்துவே எல்லா பண்டிகைகளில் நிஜம்; நம்மிடம் நிஜமான கிறிஸ்து இருப்பதால், நமக்கு நிழல் தேவையில்லை (கொலோ. 2:16-17; யோவான் 1:14). வெற்றிச்சிறக்காத சூரிய கடவுளின் நாளை உலகம் கொண்டாடுகையில், சாத்தான், உலகம், பாவம் மற்றும் மரணத்தை வெற்றிச்சிறந்த உண்மையான நீதியின் சூரியனான கிறிஸ்து (மல். 4:2) நமக்குக் இருக்கிறார். நமக்கு கிறிஸ்து தேவை, ஆனால், கலப்படமான அந்த மஸ்தேவையில்லை.
கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்தவத்தால், போஜனத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒரு புளிப்பாக இருக்கிறது (மத். 13:33). 1 கொரிந்தியர் 5:6-8ல் பவுல், புளித்த மாவை கழித்துப்போடவும் அதற்குப் பதிலாக புளிப்பில்லா அப்பப் பண்டிகையை, அதைத் தொடர்ந்து வரும் பஸ்காவை (யாத். 12:15-20) கைக்கொள்ளவும் நமக்கு புத்திசொல்லுகிறான். இது முழுமையான கால அளவான ஏழு நாட்கள் நீடிக்கிறது, இது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் முழு கால அளவையும் அடையாளப்படுத்துகிறது. நம் போஷாக்கு மற்றும் அனுபவமகிழ்ச்சியாகவுள்ள கிறிஸ்துவாகிய புளிப்பில்லா அப்பத்தை ஆசரிப்பது ஒரு வாழ்நாள்-முழுவதுமான பண்டிகையாகும். அவர் மட்டுமே உண்மையான ஜீவ நிரப்பீடு, சத்தியம், முற்றிலும் தூய்மையானவர், கலப்படம் இல்லாதவர், நிஜத்தால் நிறைந்திருப்பவர்.
நாம் தெரிந்துகொள்ளப்பட்ட இனமாகவும், ஒரு இராஜரீக ஆசாரியத்துவமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருக்குச் சொந்தமான ஜனமாகவும் இருக்கிறோம் (1 பேதுரு 2:9). விசுவாச துரோகமான இந்த யுகத்திலே, உலகத்திலிருந்தும், கலப்படங்களால் நிறைந்துள்ள சீரழிக்கப்பட்ட கிறிஸ்தவத்திலிருந்தும் பிரிக்கப்பட வெளியே வரவும் அவற்றிலிருந்து பிரிக்கப்படவும், அவளது வாதைகளைப் பெறாதபடி அவளது பாவங்களில் பங்குபெறாதபடியும் கர்த்தர் ஜெயங்கொள்பவர்களான நம்மை அழைக்கிறார் (வெளி. 18:4). மறைவான மன்னாவை ஜெயங்கொள்பவர்களுக்குப் புசிக்க கொடுப்பதே ஜெயங்கொள்பவர்களுக்கான கர்த்தரின் வாக்குதத்தம் (வெளி. 2:17). நாம் கர்த்தரை நேசித்து, உலகத்தையும் அதன் அனுபவமகிழ்ச்சியையும் கைவிட்டால், ஒரு அனுபவத்திற்குரியரீதியிலும் மேலான விதத்திலும் நாம் கர்த்தரை நிச்சயமாக அனுபவித்துமகிழ்வோம்.

உங்கள் வாசிப்புக்கான வேத வசனங்கள்

எரேமியா 10:2-3 – “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளா-திருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.

1 கொரி. 5:8 – “ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

1 கொரி. 10:14 – “ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக-ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். 

1 Comments

Post a Comment
Previous Post Next Post